Tamilnadu

News June 27, 2024

மத்திய அமைச்சரிடம் எம்.பி கோரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா, பினாங்கு மற்றும் சவுதி அரேபியா, ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

News June 27, 2024

திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

image

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

News June 27, 2024

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

சென்னை: பொது இடங்களில் உரிய கண்காணிப்பின்றி உரிமையாளர்கள் உடன் இல்லாத நிலையில் பிடிக்கப்படும் மாடுகளுக்கு சீப் பொருத்தப்படும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், அதே மாடு 3ம் முறை பிடிக்கப்பட்டால் ஏலம் விடப்படும், சாலையில் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கும் அதன் உரிமையாளர்கள் இடையூறு செய்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News June 27, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

காரைக்கால் கூடுதல் வேளாண்மை இயக்குநர் அலுவலகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காரைக்காலில் தற்போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது குறுவை பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 30.06.2024-வரை சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை 15.07.2024-க்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 27, 2024

கடலூரில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

போட்டித் தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்டம் மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்பு வருகிற ஜூலை. 1ம் தேதி குத்துக்கல்வலசையில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

News June 27, 2024

குரூப் தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

2327 பணிக் காலியிடங்களுக்கான TNPSC Group II, II A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வைத்து நடக்கிறது. வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 5ம்தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். 100 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை.22 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில் ஜூலை 7, 14, 21 இல் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு ஜூலை 8, 15, 22 இல் இயக்கப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

News June 27, 2024

அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

image

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தினால் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News June 27, 2024

திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!