India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 24) துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாச்சாவடிமேடு, தோகை பாடி, கப்பூர், தெளி, ஒருகோடி, நெற்குணம், கோவிந்தாபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தபட்டுள்ளது இதில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சள் பைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த இயந்திரமானது சமீபத்தில் சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் வேண்டாம் என ஏகனாபுரம் கிராம மக்கள் 631வது நாளாக நேற்று(ஏப்.22) இரவு நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதி மக்கள் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தொடர்ச்சியாக பசுமை விமான நிலையம் வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
நாகபட்டினம் பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் கார்த்திக் (20), இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் மலைராஜன் (26), அக்கரைப்பேட்டை ராஜசேகர், நாகூர் சம்பா தோட்டம் சஞ்சீவ்காந்தி (25) ஆகியோர் படகு வாங்குவதற்காக காரில் தூத்துக்குடி நோக்கி இன்று காலை சென்றனர். உப்பூர் அருகே, பட்டுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி கார்த்திக், மலைராஜன், ராஜசேகர் ஆகியோர் பலியாகினர். சஞ்சீவ்காந்தி படுகாயம் அடைந்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்த உள்ளதாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் சத்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை நேற்று(ஏப்.22) போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமான பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி வழங்கும் வகையில், வழக்கமான பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது. பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து டூவீலர்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளில் செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.