Tamilnadu

News June 26, 2024

சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை!

image

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் அனைத்து உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இன்று ( 26-06-2024 ) சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனு முகாமில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.

News June 26, 2024

சிறப்பு கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி
சிறப்பு கிராம சபைக் கூட்டம் 28.06.2024-ம் தேதியன்று காலை 11 மணிக்கு புதுகை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.06.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன். தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள். பொதுமக்கள் காத்திருந்து தங்களின் மனுக்களை கொடுத்தனர்.

News June 26, 2024

வேளாண் உபகரணங்கள் வழங்க அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயிகள் அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களை தொடர்பு கொண்டும், உழவன் செயலி மற்றும் கூட்டுறவு இணையதளம் https://rcs.tn.gov.in/ மூலம் சங்கங்களில் உள்ள வேளாண் உபகரணங்களை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாவட்டகாவல்கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சியாமளா தேவி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற மனு நாளில் நில பிரச்சனை, பணம் பிரச்சனை, சொத்துதகராறு போன்ற பிரச்சினைகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

News June 26, 2024

கடலூர் ஒழுங்குமுறை கூடத்தில் இன்று வரத்து குறைவு

image

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (26/06/2024) புதன்கிழமை எள் வரத்து 2.65 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

News June 26, 2024

ஈரோடு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/VTRWijWVcgNBn57w5 என்ற லிங்கில் பதிவு செய்து, ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, ஜூலை 2ம் தேதி நேரில் வர வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

எஸ்.பி. தலைமையில் போலீசார் உறுதிமொழி ஏற்பு

image

உலக போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.இராஜாராம் தலைமையில் போலீசார் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில் டி.எஸ்.பி.க்கள் சௌமியா, நாகராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், தனிபிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தொழில்கள், வியாபாரம் செய்ய கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இதற்கு www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, விண்ணப்பித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

News June 26, 2024

திருச்செந்தூர் கோவிலில் திருவிழா அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!