India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்ப அலை வீச கூடும் என அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வீட்டை விட்டு அவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் வெயிலில் வெளியே வந்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பரிசுகள் கொடுக்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பழனி அடிவாரத்தில் சேகர் என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பயந்து வெளியே ஓடினர். உடனடியாக பாம்பு பிடிக்கும் நாகராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நாகராஜ் வீட்டிற்குள் இருந்த 10 அடி நீளம் கொண்ட கருஞ்சாரை பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர், வனத்துறை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இன்றும், நாளையும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ நிறைவு நாள் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று பாடலீஸ்வரர் கோயில் குளத்தில் பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது இதற்காக கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இன்று காலை கோயில் அருகே உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் “பெண்ணே விழித்துக் கொள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் இன்று திரையிடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் அடுத்த குப்பங்குளத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிம்பு சாரதி என்பவர் இன்று காலமானார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயரும், வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் வி.சி.க கடலூர் நகர அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சூர்யா, கிருபா, ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விருத்தாசலம், பெரியார் நகர் கங்கை வீதி, வாலிபால் கிரவுண்ட் காம்பவுண்டு சுவர் அருகில் நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சியில் கூறியும், அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் தொற்றும், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் இருக்கிறது. உடனடியாக இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.