India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் உள்ள உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 31.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தினை அணுகவும். SHARE பண்ணுங்க!
திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு டெல்லியில் ஆக.23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவர் செல்வம் பங்கேற்கிறார். மேலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா விருந்தளிக்கிறார். 24-ல் முறைப்படி இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு கலால் மாவட்டத்தில் 157 டாஸ்மாக் கடைகளுக்கு பார் ஏலம் விடப்பட்டிருந்தது. இதில் சுமார் 50 கடைகளுக்கான பார் ஏலம் நடத்தப்படவில்லை. மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் இன்று மறு ஏலத்திற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட உள்ளது. இதில் விடுபட்ட பார்களுக்கான ஏலம் இறுதி செய்யப்பட உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் அனைத்து பார்களுக்கும் பொது ஏலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் உள்ள சுங்கம் பகுதியில், சைபர் குற்றங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் மோசடிகள் குறித்து நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சரவணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது,மோசடி நடந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்தோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.
கரூர் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
மாமல்லபுரத்தில் நேற்று(ஆகஸ்ட் 19) இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண் சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகிழ்ச்சியான சூழலில் நடந்த இச்சம்பவம், திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)
மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்க என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு. கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை ஆகஸ்ட் 21ஆம் தேதி அடக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.