India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டையார்பேட்டை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவளித்த காசிமேடு ஐஸ் மீன் கமிஷன் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் சால்வை அணிவித்து நேற்று மரியாதை செய்தார். இந்நிகழ்வில் மீனவ சங்க நிர்வாகி பாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கொள்ளிடம் அருகே அரசு செந்தமிழ் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, கடல் அட்டைகள் மற்றும் இதர போதைப்பொருட்கள் கடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட மக்கள் வானொலி, தொலைபேசி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மோர், லஸ்ஸி, பழைய சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களையும் பருக வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று மாலை தெரிவித்தார்.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் 2வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.07 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்ட பராமரிப்பு பணிகளுக்காக 15 வது மத்திய நிதி குழு மானியம் 2023 – 24 திட்டத்தின் கீழ் ₹96.60 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஜெட்டிங் மெஷின், இரு டி – சில்ட்டிங் மெஷின்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று நடந்த கள்ளழகர் எழுந்தருளும் விழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் 60 குழுக்களாக நடத்திய சோதனையில் 82 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்களிடமிருந்து 26 கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு 69 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி, தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் சித்ரா பெளர்ணமி நிலாவினை டெலஸ்கோப்பில் காணும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் நல்லாசிரியர் சம்பத்சாமுவேல், முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலாவை காண பயிற்சி அளித்தனர்.
தூத்துக்குடியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 76 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை பராமரிப்பதற்கு 45 தொழில்நுட்ப ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 11 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பயண தடை விபத்து காலதாமதம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் இன்று குற்றம் சாட்டியுள்ளது.
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் (23.04.2024) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.