India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் உணவின் தரம் , ருசி மற்றும் சுகாதாரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், பிரபல நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாரயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மன வேதனையை அளிக்கிறது எனவும், இனிமேலாவது தமிழக அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜுன்19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தஞ்சாவூர்,பாபநாசம்,திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், ஒரத்தநாடு ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு சுமார் 308 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவலஞ்சுழி கிராமத்தில் உள்ள பெண் ஒருவரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கல்லூரி செல்ல வேண்டும் என்றும், கல்லூரி செல்வதால் ஏற்படும் நன்மைகள் படிப்பின் அவசியம் குறித்தும், அரசு உயர் கல்வி படிப்பதால் செய்து வரும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து கல்லூரி செல்ல வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
தபால் நிலையங்களில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடாக ரூ.10 லட்சம் வரை பெறலாம் என சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார். 18 முதல் 65 க்கு வயதுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடு பெறும் வசதி தபால் துறை மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 20, 21ல் சிறப்பு முகாம் நடைபெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 14,644 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பர்கூர், மத்தூர், காவேரிப்பட்டிணத்தில் மட்டுமே 10,600 ஹெக்டேரில் சாகுபடியாகிறது . தற்போது தென்னையில் கருந்தலைப்புழு தாக்கம் அதிகமாக உள்ளதால் அவற்றின் அறிகுறிகள், மேலாண்மை பற்றி கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊதியூர், சாய்ராம் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் திருப்பூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி 8 பேர் சோதனையிட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசரணை நடத்தியதில் உதயம் பத்திரிக்கை நிருபர் நவீன்பிரசாத்(38), மாதேஷ்வரன்(36), மகேந்திரன்(31), சுபாஸ் சந்திரபோஸ்(32) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு. தஞ்சாவூர் 34 மிமீ, வல்லம் 20 மிமீ, குருங்குளம் 36.20 மிமீ, திருவையாறு 23 மிமீ, கும்பகோணம் 26 மிமீ, பாபநாசம் 40 மிமீ, கீழ் அணை 54.80 மிமீ, அய்யம்பேட்டை 24 மிமீ, ஈச்சன்விடுதி 12.40 மிமீ, பூதலூர் 15.60 மிமீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 317.80 மிமீ அளவிற்கு பதிவாகியுள்ளது.
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் அதிகாரிகள் நேற்று (ஜூன்.19) இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ. 2.14 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பத்திரம் பதிவு அதிகாரிகள் மற்றும் உள்ளிருந்த நபர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ஆவடி டேங்க் பேக்டரி, முத்தாபுதுப்பேட்டை, மாங்காடு ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பல்வேறு வழக்குகளில் திருடுபோன சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், 36 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டது. அதனை நேற்று (ஜூன்.19) ஆணையர் கி.சங்கர் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் ஒப்படைத்தார். இதில் துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி, பெருமாள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.