India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன்.21 ஆம் தேதி நடக்க இருப்பதாக முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜூன்.20 ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் எரிவாயு சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்கலாம்.
கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. முப்பெரும் விழாவில் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் தற்போது வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை திமுக – காங்கிரஸ் உறவில் விரிசல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், “தேர்தலில் திமுக வெற்றி பெற காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும். திமுகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்” என்று கூறினார். இதனால், திமுக – காங்கிரஸ் உறவு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கடலூர் பேருந்து நிலையத்தில் நேரம் பிரச்சனை குறித்து தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுடைய பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடலூர் பேருந்து நிலையத்தில் அரசு பணிமனை ஊழியர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களும் அரசு பேருந்து ஓட்டுனரும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து புற காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது இதனை நேரில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
சீர்காழியில் விழுதுகள் இயக்கம் சார்பில் இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சிறப்பு முகாம் வருகிற ஜூன் 17 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை விழுதுகள் இயக்க மருத்துவ முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 40 வயது கடந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில், பணமில்லா பரிவர்த்தனை 100% பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, கோவை, உள்ளிட்ட நகரங்களுக்கு சென்னையிலிருந்து 1,100க்கும் மேற்பட்ட பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் கூகுள்பே, போன்பே வாயிலாக டிக்கெட் பெறும் வசதி மே மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் அருகே இன்று(ஜூன் 15) வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சிறில் என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த 61 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் (ஜூன் 14) மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை முதல் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். முன்னதாக, மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து கடல் மாதாவை வணங்கி கடலுக்குள் சென்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர், முதுநிலை கணக்காளர், உதவி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பணியிடத்திற்கு 5 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது. இந்நிலையில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மதுரை எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.