India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து இன்று(ஏப்.24) காலை தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அய்யம்பேட்டை ஸ்டார் லைன் கல்லூரி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லட்சுமி(50) என்பவர் உயிரிழந்தார்.
மதுரை புதுார் தொழிற்பேட்டை MSME தொழில்நுட்ப அலுவலகத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி, பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே 2 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் இதில் கலந்துகொள்ளலாம். விரும்புவோர் 0452 – 2568313 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு , கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, மேல்நெல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரோஸ்(45). இவரது வீட்டில் இன்று(ஏப்.24) அதிகாலை 3 மணிக்கு மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், அருகில் இருந்த 3 மூட்டை வேர்க்கடலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் எரிந்து சேதமானது. கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று 24 ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2023- 2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.