India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி அடுத்த கொத்தக்கொட்டை பகுதியில் வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக ஜோதிகா (8) மற்றும் அவரது தம்பி ஜோதிஷ் (7) ஆகிய இருவரும் அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். திடீரென தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் சடலத்தை மீட்ட வாணியம்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தது.
நீலகிரியில் வெயிலின் தாக்கம் கூடுதலாகி வருவதால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசர தேவையின்றி பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்’ என நீலகிரி ஆட்சியர் மு.அருணா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை, கே.கே.நகர் கன்னிகாபுரத்தில் கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் புகுந்து பொதுமக்களை கத்தியால் தாக்க முயற்சித்த ரவுடிகள் கோபி, சஞ்சய் ஆகியோரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகராறின்போது பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடிகளுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்ததில் சஞ்சய் படுகாயமடைந்தார்.
கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் முனியாண்டி. பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது சென்பகனூர் அருகே 3 இளைஞர்கள் பேருந்தை தவறவிட்டதாக கூறி லிப்ட் கேட்டுள்ளனர். பரிதாபப்பட்ட முனியாண்டி மூவரையும் ஏற்றி டோல்கேட் அருகே சென்ற போது தாங்கள் வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை தாக்கி வாகனத்தினை கடத்த முயன்றனர். விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல கூறி மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மேற்கண்ட மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார் .
வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று தமிழக அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள சமூக சேவை செய்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு 04366–290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மே மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசுப்பணியாளர்களுக்கு ஓய்வுதியம், பணிக்கொடை (கிராஜுவிட்டி ), வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடகவும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.
டி.கல்லுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நேற்று சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அழகுராஜா தடுத்துள்ளார். அப்போது கே.சத்திரப்பட்டியை சேர்ந்த அழகுராஜா, தங்கபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து காவலர் அழகுராஜாவை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். காவலர் அளித்த புகாரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.