Tamilnadu

News June 11, 2024

தி.மலை: உடல் கருகி ஒருவர் பலி

image

செய்யாறு டவுன் வெங்கட்ராமன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டில் உள்ள ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் காமராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீசார் உடல் கருகிய நிலையில் இருந்த காமராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

News June 11, 2024

தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

image

காமக்காபட்டியைச் சேர்ந்தவர் வேண்டாமணி . இவரது அக்கா மகன் தெய்வம் என்பவர், நேற்று சொத்தில் உனக்கு பங்கு தர முடியாது எனக் கூறி அவரை தாக்கினார். அவருடன் வந்த ஈஸ்வரி, ராணி ஆகிய இருவரும் வேண்டாமணியை அடித்து உதைத்தனர். உடன் வந்த பாண்டி என்பவர் அரிவாளால் அவரின் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 11, 2024

கோபி: கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்

image

கோபி போலீசார் குள்ளம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கண்காணித்தபோது ஒரு வீட்டிலிருந்து ஆண் ஒருவர் தப்பி ஓடினார். வயதான சண்முகவடிவு என்பவரை விசாரித்ததில் 21வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சண்முகவடிவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News June 11, 2024

இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை- குறைந்த கடல் சீற்றம்

image

நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வபோது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடலூர் கிராமங்களில், லேசாக கடல் கொந்தளித்து கடல் சீற்றமாக காணப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று இரவும் கன மழை பெய்த சூழலில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று காலை கடல் சீற்றம் குறைந்து நாகை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News June 11, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை-பாஜக புகார்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாஜக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மாநகர பாஜக சார்பில் அளித்துள்ள மனுவில், இந்த அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர்,ஆனால் உரிய நாற்காலி வசதி கூட இல்லாமல் தரையில் அமர வைக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது

News June 11, 2024

கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து சரிவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மிமீ): பெணுகொண்டாபுரம் 16.2, போச்சம்பள்ளி 8.5, கேஆர்பி டேம் 6.6 என மொத்தம் 31.3 மிமீ மழை பதிவாகி உள்ளது. கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 111கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

News June 11, 2024

தம்பி வீட்டை அண்ணன் கொளுத்தியதால் பரபரப்பு

image

சின்னசேலம் அருகே இவராவார் காட்டுக்கொட்டாய் பகுதியில் நேற்று இரவு தம்பி வீட்டை அண்ணன் தீ வைத்து கொளுத்தியதால் ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் 10 கிராம் தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News June 11, 2024

அறநிலையத்துறையின் சார்பில் கமலமுனி சித்தர் குருபூசை

image

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கமலமுனி சித்தருக்கு குரு பூஜை நேற்று மாலை நடைபெற்றது பூஜை செய்த சித்த மருத்துவர்களை திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் அவர்கள் கெளரவித்து நினைவு பரிசும் வழங்கினார தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது

News June 11, 2024

அரசு அனுமதியின்றி பதாகைகளை வைத்தால் சிறை

image

புதுச்சேரி வடக்கு உட்கோட்ட நடுவா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சாலைகள், பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதைத் தவிா்க்க வேண்டும் மேலும் திறந்தவெளி தடுப்புச் சட்டத்தின்படி, அரசு அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெறாமல், பொது இடங்களில் பதாகைகள் வைப்பது குற்றமாகும். அப்படி வைத்தால் சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படும் என்றார்.

News June 11, 2024

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.பி.

image

நாடாளுமன்ற தேர்தல் முடிகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!