India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ஆர். வரதராஜன் மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கு ஒர் கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர் அதில் திருவாரூர் காரைக்குடி ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும் எனவும் மதுரைக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அதிகம் பேர் செல்வதால் காரைக்குடியில் இயங்காமல் 6 மணி நேரம் நிற்கும் ரயிலை மதுரை வரை இயக்க கோரியுள்ளனர்.
கோவை மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள் , பொட்டல பொருள்கள் சட்டத்தின்கீழ் பொட்டலமிடுவதற்கான உரிய பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது என எடையளவில் முரண்பாடு குறித்து 43 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் தொகுதியில் இம்முறை கூட்டணிக்கு தலைமை வகித்த கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கினர் . இந்நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் போட்டியிட்டார். இவர் 4 லட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் மாநிலத்தில் திண்டுக்கல் தொகுதி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் 9 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு அறையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனுமதி அட்டையில் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்கள் மேற்கூறிய பள்ளியில் தவறாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2,75,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (ஜூன் 5) வேலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜானகி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டையை சேர்ந்தவர் கமால்பாஷா (40), இவரது மனைவி அல்மாஸ் (25). இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இருவரும், 2வது திருமணம் செய்துகொண்டவர்கள். தம்பதிக்குள் குடும்ப பிரச்சனை இருந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்த அல்மாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே உள்ள ரோட்டரி அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சுபாக்களியிடம் கடந்த 2022ஆம் ஆண்டு 4.50 பவுன் தங்க நகையை வாலிபர் பறித்து சென்றார். இந்த வழக்கில் அரவக்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. செல்வம் என்பவருக்கு ஆறாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் அபராதமும் நேற்று வழங்கப்பட்டது.
சமீபகாலமாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் அனுமதி இன்றி சாலையோரங்களில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றது என்று Way2Newsஇல் செய்தி பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் நேற்று அனுமதியின்றி இயக்கிய கழிவுநீர் வாகனத்தை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிமையாளரிடம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழியும் பெற்றனர்.
பா்கூா் வேளாங்கண்ணி அகாடமியில் 2024ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். வேளாங்கண்ணி அகாடமி மாணவா் எஸ்.நரேன் காா்த்திகேயன் 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எஸ்.பூவிழி 683 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், எஸ்.காா்த்திகாதேவி 681 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பரமன்குறிச்சி அருகே உள்ள முந்திரி தோப்பை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.பாஜக பிரமுகர். இவர் தனது நண்பர்களிடம் கோவையில் பாஜக வெற்றி பெறும். இல்லையென்றால் தான் மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டுள்ளார். கோவையில் பாஜக தோல்வி அடையவே இன்று ஜெய்சங்கர் தான் சவால் விட்டபடி மொட்டை அடித்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.