Tamilnadu

News June 6, 2024

வாலாஜா: வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஷேக் மயூம் ஆலம்(40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News June 6, 2024

செங்கல்பட்டு: திடீர் மழையால் அவதி

image

செங்கல்பட்டு மாவட்டம் பவூஞ்சூர் வார சந்தை வாரந்தோறும் புதன் கிழமை செயல்படும். நேற்று மாலை திடீரென சூரை காற்றுடன் அதிக அளவு மழை பெய்ததால் வார சந்தை கடுமையான பாதிப்பு அடைந்தது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே காய்கறிகளை வாங்கி சென்றனர் . திடீர் மழையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

News June 6, 2024

அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மரியாதை

image

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், விசிக சார்பில், சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் பொது செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். எனவே, நேற்று ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு ஈரோடு, திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமையில் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.

News June 6, 2024

ஜூன் 26ல் குறைதீர் முகாம்

image

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல்துறை சார்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர் முகாம் வரும் ஜூன் 26-ம் தேதி, காலை 11 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார்.

News June 6, 2024

தஞ்சாவூர்: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

image

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த தம்பதி மெய்யழகன்(43) – மல்லிகா(33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் மல்லிகா குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஜூன் 4 அன்று திடீரென மெய்யழகன் உயிரிழக்கவே , இதைகேட்டு ஊர் திரும்பிய மல்லிகாவும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News June 6, 2024

குமரி: நில அதிர்வால் அச்சம்!

image

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று(ஜூன் 5) இரவு லேசான நிலவு அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாத போதிலும் நில அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர்.

News June 6, 2024

காஞ்சிபுரம்: டெபாசிட் இழந்த 9 வேட்பாளர்கள்!

image

காஞ்சிபுரம் மக்களவைத்(தனி) தொகுதியில், திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் 2 ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

கார்த்தி சிதம்பரம் விமர்சனம

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று அண்ணாமலையின் பிறந்தநாள். அதற்கு எனது வாழ்த்துகள். அண்ணாமலை அரசியல் உண்மைகளையும், தனது உயரத்தையும் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் படுதோல்வியை சந்தித்துள்ளார் என்று கார்த்திக் சிதம்பரம் கூறினார்

News June 6, 2024

நெல்லையில் அதிகபட்சமாக 5.6 மில்லிமீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை முதலே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று மாலை பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனை அடுத்து திருநெல்வேலியில் 5.6 மில்லிமீட்டர் மழை பதிவும்,பாளையங்கோட்டையில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று காலை நெல்லை மாவட்ட நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

News June 6, 2024

தென்காசி:கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்திக்கிறார்

image

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். நிலையில் இன்று காலை 11 மணியளவில் தென்காசியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல் சந்திப்பாக இன்று உள்ளது.

error: Content is protected !!