Tamilnadu

News April 25, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் மரணம் 

image

மருங்காபுரி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.

News April 25, 2024

நடு ரோட்டில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் போராட்டம்

image

மதுரை, கள்ளிக்குடி அருகே கே.சென்னம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று 10-க்கும் மேற்பட்ட கிராம
மக்களோடு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று ஆலையை மூட வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 25, 2024

கோவை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

News April 25, 2024

நெல்லை: காதலர்களிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த மூவரை போலீசார் இன்று(ஏப்.24) கைது செய்தனர். காதல் ஜோடியான திருவாரூரை சேர்ந்த இளைஞரும் வள்ளியூர் பகுதியை சேர்ந்த பெண்ணும் நேற்று(ஏப்.23) வள்ளியூர் முருகன் கோயிலுக்கு சென்றனர். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்த மூவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

News April 25, 2024

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மேலும், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News April 25, 2024

அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் 4 பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை சிதம்பரம் அருகே உள்ள அக்ரி மங்கள கிராமத்தில் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பி அடித்து கொலை செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து பாஜக தலைவர் தவறான கருத்தை பதிவு செய்தார்.எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு

News April 25, 2024

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

காரைக்கால் ரயில் நிலைய 2-ஆவது தண்டவாளப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய கண்காணிப்பாளர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கறிக்கோழி, முட்டை கொண்டு வர தடை

image

கேரளாவில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அங்கு பறவை காய்ச்சல் வைரஸ் கிருமி பரவி உள்ளது உறுதியானது. இதனால் அப்பண்ணைகளில் வளர்ந்த கோழி, வாத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தேனி மாவட்டம் வழியாக வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழிகள், வாத்துக்கள், தீவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News April 25, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!