India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் இன்று நேரடியாக தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேரம் இருவரும் உரையாடி உள்ளதாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <
மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (18.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குநர் காஞ்சனா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (ஆக.20) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
https://cmtrophy.sat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், இணையதளங்களில் பகிரப்படும் வேலை வாய்ப்பு லீக்குகள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான வேலை வாய்ப்பு செய்திகளில் நம்பிக்கை வைப்பதால் பண இழப்பு மற்றும் தனிப்பட்ட தகவல் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.