Tamilnadu

News April 25, 2024

திருவாரூர் இவிஎம் இயந்திரம் பார்வையிட்ட வேட்பாளர்

image

திருவாரூர் கடந்த 19.04.24 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் வாக்களித்த இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினை நாகை தொகுதி இ.கம்யூ.கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். வேட்பாளருடன் வாக்கு சாவடி முகவர்கள் உடனிருந்தனர்.

News April 25, 2024

சிவகங்கை: நகையில் அடகு வைத்தவர்கள் கைது

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் அவர்களை கைது செய்தனர்.

News April 25, 2024

புதுச்சேரியில் நீட் மாதிரி நுழைவு தேர்வு

image

புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. இந்த தேர்வு ஏப்.28 ஆம் தேதி காலை 10: 00 மணி முதல் மதியம் 1: 20 மணி வரை, புதுச்சேரி புது பஸ்ஸ்டாண்ட் மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது. தினமலர் மாதிரி நீட் நுழைவு தேர்வில் பங்கேற்க 78714 79674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் முன்பதிவு செய்யவும்.

News April 25, 2024

கல்வி மையத்தில் பாடல் போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இன்று (24.04.2024) மாணவர்களுக்கு பாடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பாடல்களை பாடினர்.

News April 25, 2024

நாகையில் நாம் தமிழர் கட்சி கண்டனம்

image

நாகை அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தமிழக அரசு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு இன்று முதல் இடம் மாற்றம் செய்துள்ளது மக்களை பெரிதும் பாதிக்கும் அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சி நாகை மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 25, 2024

அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பிரச்சாரம்

image

தேனி மாவட்டம் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி துவக்கப்பள்ளி சார்பில் இன்று அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டி அரசு வழங்கும் நலத்திட்டங்களை துண்டு பிரசுரங்களில் அச்சிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கம்பம் சாதிக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பிரச்சாரம் செய்தனர்.

News April 25, 2024

சித்திரகுப்தருக்கு சிறப்பு பூஜை

image

பழனி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சித்திரகுப்தர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இளநீர், நுங்கு, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் படையல் இடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் சித்திரகுப்தருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரகுப்த நாயரை வணங்கினர்.

News April 25, 2024

சீன கப்பலில் வந்த மாலுமி சடலமாக மீட்பு

image

சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு அண்மையில் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. சீன கப்பலில் வந்த Gong-Yuwu (57) என்ற மாலுமி கப்பலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த 6ம் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் கப்பல் இருந்த போதே காணவில்லை என இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டார்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக இன்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

உயர்கல்வி வழிகாட்டுதல் மாணவர்களுக்கு அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வருகின்ற 28 ஆம் தேதி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் ஜலால் முஹம்மது, யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். இதில் மாணவர்கள் பங்கு பெற்று பயன்பெற மேலப்பாளையம் ஆபிஸர் அகாடமி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!