India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வீதி உலா நிகழ்வும், மகா தீபாராதனையும் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்தம்,பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
புதுவையில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய Ultra Deluxe வகை இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை புதுவை அரசு போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி நேற்று 45 இருக்கைகளுடன் கூடிய இரண்டு புதிய PRTC சொகுசு பேருந்துகளுக்கு பூஜை போட்டு இயக்கப்பட்டன . இந்த பேருந்து புதுச்சேரியில் இருந்து மாலை 6. 25 மணிக்கு பேருந்து புறப்படும். கட்டணம் ரூ.640 வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் nமதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை நகர் பகுதியில் 101.12°F, மதுரை விமான நிலையத்தில் 103.28°F, வெப்பம் பதிவானது. மேலும் சில நாட்கள் இதேபோன்ற வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகமுதலமைச்சர். மு. க. ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சாம கவுண்டனுர் வட்டம் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சிவராஜ்(56) என்பவரை பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி கல்லூரியில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். உடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.
கோடை காலத்தை முன்னிட்டு தற்போது நிலவும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கோடைகாலத்தில் குறைவான நீர் பயன்படுத்தும் நெல்லுக்கு மாற்று பயிரான கம்பு, சோளம், ராகி, எள், பச்சைப்பயறு, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்து பயனடையுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகி குழந்தை காலனி முத்து தந்தை இன்று காலமானார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கடலூர் நகர துணை செயலாளர் பூபாலன், முகாம் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலக்கூடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்(19) நரம்பு தளர்ச்சியால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஏப். 24) மாலை திடீரென மணிகண்டன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.