India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக நேற்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் சாலையில் அருண் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புழல் போலீசார் அருணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மன்சூர்அலி (38). இவர் மீது விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் மன்சூர்அலியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று உத்தரவிட்டார். அதன் பேரில் மன்சூர் அலி இன்று தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சி.எம்.சி மருத்துமனை எதிரே மின்மாற்றியில் நேற்று ( ஏப்.24) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொது மக்கள் மின்சார வாரியம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வெயில் காரணமாக மின்மாற்றியில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மீஞ்சூரில் உள்ள ரயில்வே கேட்டில் சமீப காலமாக மாலை ஆறு மணிக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. ஒன்றரை மாதத்துக்கு முன்பாக மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இருசக்கர வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போலீசார் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் மதுவிற்ற பெருமாள்(24) என்பவரை பிடித்த போலீசார், ரூ.26 ஆயிரம் மற்றும் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மணிமங்கலம் தலைமை காவலர் சங்கர், 2ம் நிலை காவலர்கள் ஆனந்தராஜ், கணேசன்சிங் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால், தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் மூலம் அனைத்து கோழி பண்ணைகள், புறக்கடை,கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்கு செல்ல 3.8 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. சித்தாற்காடு,பாளையூர்,தண்ணீர்பந்தல் அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடப்பாக்கத்திற்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சிதிலமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதூர் கிராமத்தில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நீர்த்தேக்கதொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வழங்கவில்லை. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிகளில் கழகத்தினர் நீர்,மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.