India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எருமபட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே உள்ள புழுதியூர் வார சந்தையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நேற்று கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இங்கு மாடு ஒன்று குறைந்தபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின; நேற்று மட்டும் ரூ.43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிதுள்ளனர் .
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை அரசு பள்ளி கூரை காற்றில் பறந்து மின்கம்பியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. வடகரை அரசு தொடக்கப் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிய கட்டடம் 33 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மும்முனை மின்சாரம் சரிவர வழங்காததால், இந்த பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி நாசமாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், குழந்தைகள் நலத்துறை மற்றும் மனநல துறை சார்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை பார்வையிட்டார்.
ஊஞ்சபாளையத்தில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப்ரல். 24) நடைபெற்றது. சோமனூர் அருகே ஊஞ்சபாளையத்தில் கிராமத்தில்
உள்ள மாகாளியம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதில் ஊஞ்சபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தேரோட்டம் நடைபெற்ற நிலையில்நேற்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் மூலவர்கள் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று பள்ளியில் பெண்ணே விழித்துக் கொள் விழிப்புணர்வு குறும்படங்கள் மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை காவல்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி அடுத்த வேளூர் பாலத்தடியில் நேற்று வீச்சரிவாளை காட்டி மக்களை மிரட்டிய திருத்துறைப்பூண்டி, கீழத்தெரு, மீனாட்சி வாய்கால் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.