India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 2 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 3 ஆண்டு காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் குரல் இசை, பரதம்,தேவாரம், வயலின்,நாதஸ்வரம்,மிருதங்கம் போன்ற கலைகள் கற்றுத் தரப்படும். இதில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
சேவுகம்பட்டி திமுக செயலாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான 62 சென்ட் நிலத்தை தங்கராஜின் கையெழுத்து இல்லாமல் அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் உதவியுடன் மதுரை உத்தங்குடியை சேர்ந்த கிறிஸ்டோபர் சாமுவேலுக்கு திருவள்ளூரை சேர்ந்த பெலிக்ஸ்மார்ட்டின் உள்ளிட்டோர் விற்றுள்ளனர். தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சார்பதிவாளர் பாலமுருகன் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி வேலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தி அடுத்துள்ள தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்தகத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை அச்சமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் தனது அண்ணன் செல்வராஜ் உடன் அச்சமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுதேசன் என்பவர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டு பேனா கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் சுதேசனை நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.24) அதிகபட்ச வெயிலாக 106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலியில் தடையின்றி விவசாயம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(ஏப்.25) தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 900 மெட்ரிக் டன் யூரியாவும், 320 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தது. இதனை அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்க உள்ளனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் ரயில்வே கேட் கீப்பர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரயில்வே கேட் களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு திருச்சி குட்செட் பகுதியில் உள்ள, ரயில்வே கேட் பகுதியில் ,நேற்று. நடைபெற்றது .அப்போது புதிதாக தேர்வானவர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ், லாம்ப்ஸ்ராக் பகுதியில் குத்தகைக்கு எடுத்த தனியார் துறை வாகன பார்க்கிங்க்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக (ஏப்.,21) நமது WAY2NEWS தளத்தில் செய்தி பதிவிடப்பட்டது. இதன் விளைவாக பர்லியார் ஊராட்சி மன்ற தலைவர் இதில் தலையிட்டு வாகனங்களுக்கு எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று புகார் அளிக்கும் எண்ணுடன் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.