India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 19 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,01,863 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,82,803 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,31,719 வாக்குகளும், நாதக வேட்பாளர் 93,253 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,19,060 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ. மணி 4,11,602 வாக்குகள் பெற்று 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பாஜக – பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,98,234 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மக்களவை தொகுதியில் 12 சுற்று முடிவடைந்த நிலையில், கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 2,80351 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி 2,58,644 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 62,055 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 55374 வாக்கு பெற்றுள்ளார். மாதேஸ்வரன் 21707 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் தற்போது வரை திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 306387 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 257972 பின்னடைவை சந்தித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 48415 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலையில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 14வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 287506, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 15812, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 138354, இசை.மதிவாணன் (நா.த.க) – 84130 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 20வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,16,559,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,08,311,
பாமக வேட்பாளர் திலகபாமா -1,01,449,
நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-88,764 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,08,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் 19வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிய துவங்கியுள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் 4,71,698 , அதிமுக 2,22,374 , பா.ம.க 1,53,661 , நா.த.க 1,16,277 வாக்குகள் பெற்றுள்ளன. மேலும் 2,49,324 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் 17 சுற்றுகள் முடிவில் இந்திய கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 3,88,638 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 28718, பாஜக 151111, நாம் தமிழர் 77333 வாக்குகள் பெற்றுள்ளனர். இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 101457 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 14ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 3,48,558 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2,71,945 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,11,522 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 18 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,75,199 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,73,600 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,23,501 வாக்குகளும், நாதக வேட்பாளர் 88,345 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,01,599 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.