Tamilnadu

News April 25, 2024

பழனி: புதிதாக மின்சார வாகனம்

image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி வாகனமும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்று கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலைத்துறை அலுவலர்களும், கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் மின் வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக அதிகப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

தனியார் பள்ளி  வாகனங்களில் ஆய்வு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 25, 2024

சித்திரை திருவிழாவை காண வந்த 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

image

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த கல்குறிச்சியை சேர்ந்த ரேவதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாந்தி ஆகிய இருவரிடம் 3 பவன் சங்கிலியையும்
வடக்கு சந்தனூரை சேர்ந்த காசியம்மாளிடம் 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் இம்மூவரும் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

புதுவையின் மணக்குள விநாயகர் கோவில் சிறப்பம்சம்!!

image

புதுவை மத்தியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில், 1666 ஆம் ஆண்டுக்கும் முன்புள்ளது. இக்கோவிலின் கோபுரம் 7913 அடி உயரம் கொண்டது. தங்க ரதத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரும், தேக்கு மரத்தால் மட்டுமே செய்யப்பட்ட தேரும் பக்தர்கள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்டது. இந்த தேரில் 7.5கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் தமிழ் கட்டடக்கலை பாணியில் வண்ணமயமாக இருப்பது சிறப்பானது.

News April 25, 2024

விருதுநகர்: மது விற்பனை செய்த நபர் கைது

image

விருதுநகர் அருகே இளங்கோவன் தெரு பகுதியில் இன்று கிழக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சேதுராமன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேதுராமன் என்பவரை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 25, 2024

அலங்காநல்லூர் : சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை

image

அலங்காநல்லூரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வாரம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதை ஊரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), என்பவர் பள்ளி சிறுமியை கடத்தி அவரது நண்பர் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். பிரவீன்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 25, 2024

நீர், மோர் பந்தல் திறப்பு

image

பரமக்குடியில் அதிமுக சார்பில் இன்று பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட ஜெயபெருமாள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 25, 2024

திருச்சியில் விவசாயிகள் செயற்குழு கூட்டம்.!

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரி குளங்களையும், தூர்வாரி தடுப்பணைகளை புனரமைக்கப்பட வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

News April 25, 2024

தென்காசி: அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரம் பேரூர், குற்றாலம் பேரூர் கழகம் ஆகிய பகுதிகளில் இன்று கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது
தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான செல்வ மோகன் தாஸ் பாண்டியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர், தர்பூசணி, லெமன் ஜுஸ், ஆகியவற்றை வழங்கினார்.

News April 25, 2024

புதுகையில் திறப்பு

image

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க கோடையில் மக்களின் தாகத்தை தீர்க்க அறுசுவை நிரம்பிய பழங்களுடன் கூடிய நீர், மோர் பந்தலை இன்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!