India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய ரகுநாத சேதுபதி என்பவர் 1687ஆம் ஆண்டு திருமயம் கோட்டையை புதுக்கோட்டையில் நிறுவினார். 40 ஏக்கர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது. தற்போது இருக்கும் அளவை விட இக்கோட்டை இரு மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்று வரலாறு கூறுகிறது. கோட்டையிலிருந்து நுழைவு வாயில் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. கோட்டையில் அடிவாரத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் குலம், மண்டபங்கள் உள்ளன.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், கோடை காலம் தொடங்கும் முன்பே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. எனவே வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் தர்பூசணி விற்பனை தொடங்கி உள்ளது. ஈரோட்டில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், சோலார், திண்டல், க.குளம், சி.என்.கல்லூரி, சூளை, லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக தர்பூசணி கடை அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அணைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வருடம் தோறும் குண்டு சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குண்டு சுடும் பயிற்சி தளத்தில் வருகின்ற 26.04.2024 முதல் 18.05.2024 வரை தேனி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினருக்கு குண்டு சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இருமாநில எல்லை பகுதிகளில் தீவர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகள் ஏற்றி குமரி மாவட்டத்தில் போட வந்த மெர்சடிஸ் பென்ஸ் லாரியை மார்த்தாண்டம் பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகரில் உள்ள புட்லாயி அம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அதிமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கடலூர் சி.கே.எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆரணி, சேவூர்,கண்ணமங்கலம் எஸ்வி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை தணிக்க இலவச தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் மாஜி அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கர், அசோக் குமார் பாண்டியன் பாரி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பாஸ்கர் வியாபாரியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும் இவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பாஸ்கர் திடீரென்று தலைமறை வாங்கி விட்டார். இது சம்பந்தமாக வெங்கடேஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில்
முன்னாள் அமைச்சர், ராமச்சந்திரன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Sorry, no posts matched your criteria.