Tamilnadu

News April 25, 2024

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு!

image

தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், உலகம்மன் கோவில் அல்லது தென்காசி பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது. கிபி.1445-1446 இல் பரக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. சிற்றாறு எனும் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளது.

News April 25, 2024

ராணிப்பேட்டை: குழந்தைகளின் தந்தை குளத்தில் விழுந்து சாவு

image

ராணிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் தயாளன்( 46 ).இவர் இன்று சென்னசமுத்திரத்தில் உள்ள தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அருகில் உள்ள குளத்தில் விழுந்து இறந்தார் . இதுகுறித்து வாலாஜா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு தயாளனின் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு திலீபன் ,தேவிகா என 2 குழந்தைகள் உள்ளனர்.

News April 25, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற சுதந்திர தினத்தன்று சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் அரசின் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

கடலூர்: தாக்குதல்.. பஸ் ஊழியர்கள் போராட்டம்

image

விருத்தாசலத்தில் இருந்து இன்று மாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சாலையின் நடுவே குடிபோதையில் தனுஷ் என்பவர் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த நடத்துநர் அருண்ராஜ் தனுசை தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த தனுஷ் அருண்ராஜை தாக்கபட்டதை அறிந்த அருண்ராஜ் சக பேருந்துகளின் டிரைவர்கள் நடத்துநர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 25, 2024

செட்டிநாட்டு கலையின் அடையாள அரண்மனை!

image

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரண்மனை, செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றி வருகிறது. ராஜா சர் அண்ணாமலை, 1912-ம் ஆண்டு கட்டினார். இதில் பளிங்கால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிரம்பிய அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. திருமணம், மதச் சடங்குகள் நடைபெறும் விசாலமான முற்றம் உள்ளது. இந்த அரண்மனையில் 1990 சதுர அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள், மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன் உள்ளன.

News April 25, 2024

சேலத்தின் சொத்தான முட்டல் இயற்கை மடி!

image

ஆத்தூர் முல்லைவாடி சாலையில் அழகிய முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவியும், ஏரியும் உள்ளது. இந்த ஏரியிலிருந்து அருவிக்கு செல்ல படகு சவாரியும் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கையோடு சேர்ந்து சுற்றிப்பார்க்க ஏற்ற இடமாக விளங்கிறது.

News April 25, 2024

மகேந்திரவாடி குடைவரை கோயில் சிறப்பு!

image

அரக்கோணம் அருகே மகேந்திரவாடியில் அமைந்துள்ளது மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரைக்கோவில். இது தமிழகத்தில் உள்ள குடைவரைகளில் மிகவும் பழமையானது. கிபி. 600 – 630ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டது. மகேந்திர பல்லவன் என்ற பெயரும் இதில் பொரிக்கப்பட்டுள்ளது. சிறிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு முழு தூண்களும், இரு அரை தூண்களும் உள்ளன.

News April 25, 2024

திருச்சி: ஆட்சியர் ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு

image

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இது பொருந்தாது.

News April 25, 2024

ராமநாதபுரம் – பெருமைமிகு கலாமின் நினைவகம்!

image

அப்துல் கலாம் நினைவகம் 2.11 ஏக்கர் பரப்பளவில் ராமேஸ்வரத்தில் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக 2015 -17ஆம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் ஏவுகணை நாயகனாக அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும், அவரின் கண்டுபிடிப்புகளும் விளக்கும் வகையில் உள்ளது. ஏவுகணைகள், அரிய ஓவியங்கள், கலாமின் உடமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நூலகம் கோளரகம், பூங்கா அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது.

News April 25, 2024

கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்

image

கடலூரில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.

error: Content is protected !!