Tamilnadu

News April 25, 2024

சிவகங்கை: நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்

image

கர்நாடகா, கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 04575-240521 என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

News April 25, 2024

மதுரை: குழந்தையை கடத்திய பெண்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் மதுரை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தாயின் புகாரை அடுத்து, குழந்தையை கடத்திய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தனர்.

News April 25, 2024

கோவை: “மை”யுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்

image

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு People of Annamalai என்ற இயக்கம் மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது கண்டித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் 100க்கும் மேற்பட்டோர் இன்று (ஏப்.25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் விரலில் ஓட்டுப்போட்ட மை இருந்ததால் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

News April 25, 2024

புதுச்சேரி சிறுமி கொலையில் திடுக்கிடும் தகவல்

image

முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச்.2ஆம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு இன்று கிடைத்துள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேலும், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் சிறப்புகள்!

image

முல்லைவனநாதர் கோவில், காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவதலமாகும். புராணத்தின் படி முல்லை கொடி சூழ்ந்த இக்கோவில், 18ஆவது தேவராப்பாடல் பெற்ற தலமாகும். மேலும், பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான முல்லைவனத் தலமாகும். குறிப்பாக வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபம் உள்ளது.

News April 25, 2024

தூத்துக்குடி- சென்னைக்கு கூடுதல் ரயில்

image

தூத்துக்குடி ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் இன்று தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு தற்பொழுது, தூத்துக்குடியில் இருந்து சென்னை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து இரவு நேரத்தில் சென்னைக்கு கூடுதலாக ரயில் ஒன்று இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.

News April 25, 2024

தென்காசியில் எச்சரிக்கை விழிப்புணர்வு

image

தென்காசி நகராட்சியில் இன்று சுவாமி சன்னதி பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டது.மேலும் மஞ்சப்பை உபயோகத்தை வலுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 25, 2024

விருதுநகர் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு 

image

விருதுநகர் ஆணை கூட்டம் சாலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்தை வழிமறித்த ஆனை கூட்டம் பகுதியைச் சார்ந்த வசந்தகுமார் என்ற இளைஞர் கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர்.

News April 25, 2024

ஈரோடு அருகே விபத்து

image

ஈரோடு, பங்களாப்புதூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால், கோபிநாத், சரவணன் அமர்ந்து இருந்தனர். அப்போது சத்தி – அத்தாணி சாலையில் பயாட்டிக் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அஜித் உயிரிழந்தார்.

News April 25, 2024

மயிலாடுதுறையில் கொலை குற்றவாளி கைது 

image

மயிலாடுதுறையில் மனைவியை பிரிந்து வாழும் சபரிநாதன் என்பவர் அருகே வசிக்கும் பிரேமா என்பவரிடம் பேசி வந்துள்ளார். இதனிடையே மது போதையில் பிரேமாவிடம் சபரிநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிரேமாவின் மகன் நடராஜன் கத்தியால் குத்தி சபரிநாதனை கொலை செய்துள்ளார். இதனிடையே குற்றவாளி நடராஜனை மயிலாடுதுறை போலீசார் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!