India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் வீரணம்பட்டியில் சேர்ந்த விவேக் குமார் (32). என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் வீசாணம் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து உள்ளார். மயக்கத்தில் இருந்த சிறுமியை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புதுச்சேரியில் இருந்து தென் தமிழகத்திற்கு மற்றும் குமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக, 45 இருக்கைகளுடன் கூடிய புதுச்சேரி – நாகர்கோவில் புதிய சொகுசு (Ultra Deluxe) பேருந்து (PRTC) இன்று (25/04/2024) முதல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாச்சலம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். ( இந்த பேருந்து கடலூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் )
விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர்கள் மூலம் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் இறைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் அனல் காற்று பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு செடிகளை காப்பதற்காக இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது இந்த பணிக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி நேரடி ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் அதிக வருவாயை தென்காசி ரயில் நிலையம் ஈட்டி தர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த ரயில் மார்க்கத்தில் கோடைகால சிறப்பு ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழங்குடியினர் அருங்காட்சியகம், உதகையில் மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகம் கி.பி 1989 -1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகும். இதில் தமிழகத்தில் வாழும் 36 வகை பழங்குடியினரின் ஆபரணங்கள், வேட்டைக்கருவிகள், வீட்டுப்பொருட்கள், மாதிரி வீடுகள் விவசாய கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அப்பகுதி பொதுமக்களிடம் பலகார சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார் 1 கோடி அளவில் பணம் வசூலித்துள்ளார்.இந்நிலையில் சீட்டு கட்டிய சிலர் பணத்தை திருப்பி கேட்டனர்.பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த ராஜா நேற்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்: பட்டினம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் கார்த்தி(33). இவர் மோட்டார் சைக்கிளில் இன்று மாலை பட்டிணங்கத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர், அண்ணாசாலையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.24) வேலூர் கன்சால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சிவசக்தி(26) குடி போதையில் வந்து நீதிபதியை பார்க்கவேண்டும் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலப் பாதை திருநேர் அண்ணாமலை அருகே இன்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறி அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மதிய உணவு அருந்தினார். உடன் உதவி ஆட்சியர் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.