Tamilnadu

News April 25, 2024

மதுரை: 13 பேர் சேர்ந்து தாக்கிய கொடூர சம்பவம்

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (17). இவரது உறவினர் உதயாவிற்கும் கோசாகுளத்தை சேர்ந்த ராஜேஷ்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் 13 பேர் கொண்ட கும்பலாக நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே எனக் கேட்டு, 13 பேரும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 25, 2024

திருப்பத்தூர்: 105.80 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.80 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 76.28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் ஆட்சியர்

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் குளிக்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

News April 25, 2024

திருப்பத்தூர்: வெப்ப அலை வீசும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏப்ரல். 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News April 25, 2024

திருச்சி கல்லூரியில் ஆதார் சேவை முகாம்

image

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை,திருச்சி கோட்டத்தின் இணைந்து ஆதார் பதிவு, திருத்தம் சேவை முகாமினை தனது கல்லூரி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தியது.இறுதி நாளான இன்று புதிய ஆதார் பதிவு செய்தல், முகவரி (ம)புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை திருத்தம் பணி நடைபெற்றது.

News April 25, 2024

திருச்சி: ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல் 

image

திருச்சி, கொடைக்கானல் பகுதியில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனுக்கு ஐந்தாண்டு  தண்டனையும் மற்றும் அவருடைய ரூ.100 கோடி மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 25, 2024

ரயில் சேவை நீட்டிப்பு

image

விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்பட உள்ளன. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 25, 2024

கரூர்: மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை

image

கரூர் ஜெகதாபியில் மாரியப்பனுக்கும், அவரது தந்தை மாணிக்கத்துக்கும் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரனை வரவழைத்து, மாரியப்பனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் மாரியப்பன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், மாணிக்கத்தை இன்று கைது செய்தனர். மேலும், கொலையை மறைக்க விபத்தில் மகன் இறந்தது போல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

News April 25, 2024

தி.மலை: அதிமுக சார்பில் பழங்கள் வழங்கல்

image

தி.மலை, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர், தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

தஞ்சாவூர் அருகே தேரோட்டம்

image

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோவில் சித்திரை திருவிழா சித்திரை 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி காலை மாலை பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 9ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

error: Content is protected !!