India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் நீடிக்கிறது மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போது அக்னி நட்சத்திரம் வெயில் போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து தினமும் மாவட்ட முழுவதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் இன்று திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.
புதுச்சேரியில் இருந்து தென் தமிழகத்திற்கு மற்றும் குமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக, 45 இருக்கைகளுடன் கூடிய புதுச்சேரி – நாகர்கோவில் புதிய சொகுசு (Ultra Deluxe) பேருந்து (PRTC) இன்று (25/04/2024) முதல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாச்சலம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். ( இந்த பேருந்து கடலூரில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் )
தேனி பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித் என்பவரை 2019-ம் ஆண்டு தேனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதைத்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவரை முன்விரோதம் காரணமாக விளாங்காடு கிராமத்தை சேர்ந்த அபிஷ், பிரதிப், ஆதி, இடும்பாவனம் பாலசுந்தரம், ஆகிய 4 பேர் சேர்ந்து தாக்கி ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, கடும் வெயிலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இளநீர், தர்பூசணி போன்ற பழ வகைகளுடன் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் இன்று அமைக்கப்பட்டது. இதில் அதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடம்பூர் அடுத்த சின்னசாலப்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவருடன் அவர்களுக்கு பழக்கம் இருந்ததுள்ளது. இதனையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 வது நாளாக குப்புசாமியிடம் இன்றும் விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் கடந்த, 19ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதற்காக, 5 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர். தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து சோதனையிலும் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததையொட்டி தற்போது, 3 கம்பெனிகள் கோவையில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.
விருதுநகர் சிவன் கோவிலில் வசித்து வருபவர் தேன் காமேஸ்வரன்(27). இவரது மனைவி பஞ்சவர்ணம்(27). இந்நிலையில் தேன் காமேஸ்வரன் அதிக மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்த தேன் காமேஸ்வரன் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து பஜார் காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் முழுமையாக சேர்க்கை செயல்பாடுகள் ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதுவரை மாணவர் சேர்க்கை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வியிடம் கேட்டபோது இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய பயணமான ஹஜ் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். கோவையில் இருந்து 400 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.