Tamilnadu

News June 4, 2024

 நாமக்கல்: 1045 வாக்குகள் முன்னிலை

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் 8 சுற்று முடிவில்  இதில் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 1,86,308 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 1,75,856 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளார். மாதேஸ்வரன்  1045 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

News June 4, 2024

சிதம்பரம்: 10 ஆவது சுற்று நிலவரம்!

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 2,47,622 வாக்குகளுடன் 50,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 1,95,051 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 77,374 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.

News June 4, 2024

194 வாக்கு வித்தியாசத்தில் விஜயபிரபாகரன்

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 10வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18,350 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 20,571 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3535 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 194 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருவாரூர் முன்னிலை வகிக்கும் இந்தியா

image

திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் 10 வது சுற்றின் நிலவரப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதன்படி சிபிஐ 249171 வாக்குகளும், அதிமுக 138866 வாக்குகளும், பாஜக 51730 வாக்குகளும், நாதக 71169 வாக்குகளும் பெற்றுள்ளன. 

News June 4, 2024

திருச்சியில் 11வது சுற்று நிலவரம்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மதியம் 2.40 மணி நேர நிலவரப்படி, 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதிமுக – துரை வைகோ – 2,75,388, அதிமுக – கருப்பையா – 114794, அமமுக – செந்தில்நாதன் – 58,411, நா.த.க – ராஜேஷ் – 52,512, 1,60,594 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.

News June 4, 2024

திருச்சி: பின்னடைவை சந்தித்த பிரதான கட்சி

image

திருச்சி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 10வது சுற்றில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். துரை வைகோ 2,75,388 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 1,14,794 வாக்குகளும் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: 13 சுற்றிலும் டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 13 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,49,338 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,29,200 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 87,904 வாக்குகளும், நாதக வேட்பாளர் 66,904 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 2,20,138 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

கரூரில் தொடரும் முன்னிலை

image

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 12-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :311320, அதிமுக / கூட்டணி (அதிமுக) :222381, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 88,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

சிதம்பரம்: பாய்ந்து செல்லும் திருமா!

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 8 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 1,91,725 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 1,61,472 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 62,509 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.

News June 4, 2024

மயிலாடுதுறையில் 11வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை

image

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 11 வது சுற்றில் காங்கிரஸ் கட்சி 2,76,347 வாக்குகளும், அதிமுக 1,26,228 வாக்குகளும், பாமக 92,862 வாக்குகளும், நாதக 65,404 வாக்குகளும் பெற்றுள்ளனர். 11-வது சுற்று முடிவில் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 1, 50,119 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!