Tamilnadu

News June 4, 2024

சிதம்பரம்: விசிக தொடர்ந்து முன்னிலை

image

சிதம்பரம் மக்களவை தொகுதியின் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 31,937 வாக்குகள் பெற்று 7,520 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 21,519 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 9,136 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 2,404 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

திருவள்ளூர்: 3 வது சுற்று நிலவரம்

image

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 71,284 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 22,934 வாக்குகள், பிஜேபி 23,079 வாக்குகள், நாம் தமிழர் 10,793 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

18,443 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 5ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 1,09,823, அதிமுக குமரகுரு – 1,28,266, பாமக தேவதாஸ் – 15,953, நாதக ஜெகதீசன் – 15,724 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் – 18,443 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

புதுவை தேர்தல் முதல் சுற்று நிலவரம்

image

புதுச்சேரி மாநிலத்தில் முதல் சுற்று முடிவடைந்து 1,22,713 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 59,759 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார், பாஜக கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் 49,909 வாக்குகளில் சேகரித்து உள்ளார், அதிமுக கட்சி வேட்பாளர் தமிழ் வேந்தன் 3247 வாக்குகள் சேகரித்து உள்ளார்.

News June 4, 2024

தென்காசி தற்போது நிலவரம் திமுக முன்னிலை

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று யூஎஸ்பி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தற்போது 10.15 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர்- 23548 அதிமுக வேட்பாளர் 13450, நாதக 8540, பாஜக வேட்பாளர் 9958.
திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

News June 4, 2024

வேலூர்: 24,000 வாக்குகள் முன்னிலையில் கதிர் ஆனந்த்!

image

வேலூர் மக்களவைத் தொகுதியில், 3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 24,404 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

திமுக கூட்டணி (திமுக) – 81,815

அதிமுக கூட்டணி(அதிமுக) – 18,978

பாஜக கூட்டணி(புதிய நீதி கட்சி) – 57,411

News June 4, 2024

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2வது சுற்றில் முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 54,792 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 21,892 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 12, 345 வாக்குகளும், நாதக வேட்பாளர் 11, 558 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 32,930 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருச்சியில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில்,
தற்போது நிலவரப்படி, மதிமுக வேட்பாளர் துரை வைகோ – 50,321, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் – 8,252, அதிமுக வேட்பாளர் கருப்பையா – 25,176, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் – 11,488, வாக்குகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து மதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

News June 4, 2024

நாகையில் நாதக மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது

image

நாகை மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது

News June 4, 2024

ஈரோட்டில் நாதக மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.

error: Content is protected !!