Tamilnadu

News April 26, 2024

சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்!

image

சேலம் மாவட்டத்தில் கடும் வெப்பம் பதிவாகி வருவதால் கறவை மாடுகளை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். மாடுகளை மேய்ச்சலுக்கு காலை 7-11 மற்றும் மாலை 4-6 மணி வரை கொண்டு செல்லவும், தினமும் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் குடிக்க வழங்கவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

News April 26, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.25)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று(ஏப்.25) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொழுவிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.

News April 26, 2024

ராசிபுரத்தில் நீர், மோர் வழங்கல்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சித்திரை தேர் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட நிகழ்வில் கடும் வெயிலிலும் பக்தியுடன் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராசிபுரம் பெரிய பள்ளிவாசல் ஜாமியா மஸ்ஜித் சார்பில் நீர் மோர் வழங்கினர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்ற மனிதநேயம் காணப்பட்டது.

News April 26, 2024

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.    கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 26, 2024

தெப்பத் திருவிழா – ஆய்வு செய்த எஸ். பி

image

மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி டி எஸ் பி உடனிருந்தார்.

News April 26, 2024

“அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்”

image

திருவாரூா் பனகல் சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் நகர அலுவலகத்தில் பொதுமக்களுக்காக நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பானகம், இளநீா், தா்ப்பூசணி , வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

News April 26, 2024

புதுவை நாகமுத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்

image

புதுவையில் உள்ள கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக, அம்மன் கோவில்களில், பால் அபிேஷகம் சிறப்பான முறையில் நடந்தது. இதையொட்டி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 108 பால் குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன

News April 26, 2024

15 வயது சிறுமி கர்ப்பம் – சிறுவன் உட்பட இருவர் போக்சோவில் கைது.

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன், கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக இன்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்ற போது இதுகுறித்து தெரிய வந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News April 26, 2024

குளச்சல்: பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு

image

குளச்சல் கொட்டில்பாடு கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் ராணி(38). இவர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த அருள்சீலி பொருளாளராக உள்ளார். ஜெர்லின் ராணி இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அருள்சீலியுடன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.25) ஜெர்லினை, அருள்சீலி உட்பட 5 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக குளச்சல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!