India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு ரயில்வே சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி, இன்று(ஏப்.26) முதல் 3 மாதம் நடைபெறுகிறது. இதனால் ராயபுரம் பாலம் & ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை; பாரிமுனை நோக்கி செல்ல அனுமதியுண்டு; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு பதிலாக வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி பாலம் வழியை பயன்படுத்த அறிவுறுத்தல்.
மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 25 ) மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி கடைகளுக்கு தொழில் உரிமம் செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நடைபாதையில் பொதுமக்கள் இடையூராக வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதிய 2024 -25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலை அறிவியல் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வர உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாளை சேவியர் கல்லூரியில் இந்த ஆண்டு 3 புதிய பாடத்திட்டம் இளங்கலையில் அறிமுகம் ஆகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற சந்துரு, பாலமுருகன், ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருகை பதிவேடு, மக்களை தேடி மருத்துவம் அளிக்கப்படும் சிகிச்சைகள்,நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன் மற்றும் கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக நேற்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்றபோது இதுகுறித்து தெரியவந்தது. மேட்டுப்பாளையம் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
தோட்டக்கலை துறை துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் சுமாா் 91.80 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வோ் வாடல் நோய் பாதிப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு மறுநடவு செய்ய ஏதுவாக தென்னை நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக அதிகபட்சமாக 40 நாற்றுகள் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ மூர்த்திகள் சீதாராம திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தேங்காய் உருட்டுதல் மற்றும் பூ பந்து உருட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.
முசிறி மேல தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி தேர் வீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ அம்மனை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் வேல் மற்றும் கரகத்துடன் முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக தேரில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஒட்டி சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.