Tamilnadu

News June 4, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்

image

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணைராணுவப் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப்படையினர் செல்போன் கொண்டுவந்ததற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

குடியரசு தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடிதம்

image

சென்னை
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், “வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற வேண்டும். பிரச்சனை எதுவும் ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

News June 4, 2024

செந்துறை அருகே தேர்த் திருவிழா

image

செந்துறை வட்டம் குமிழியம் கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு விநாயகர், மாரியம்மன் திருத்தேரோட்டம் இன்று (3.6.2024) ஊராட்சி மன்ற தலைவர், நாட்டாண்மைக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொது மக்கள் ஒன்றிணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

News June 4, 2024

தூத்துக்குடி: கனிமொழி மீண்டும் ஜெயிப்பாரா?

image

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மக்களவை தொகுதியை அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர்.  தூத்துக்குடியில் 2வது முறையாக கனிமொழி போட்டியிட்டுள்ளார். எனவே இத்தொகுதியின் முடிவுகளை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News June 4, 2024

திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை 133 சுற்றுகள்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது. பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். மொத்தம் 133 சுற்றுகள். வாக்கு எண்ணிக்கை மேசைகள் 84, அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மேசைகள் 9 ஆகும். வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணி அளவில் தொடங்குகிறது.

News June 3, 2024

தலைமலை சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும்

image

கடையம் அருகே ராமநதி அணை அருகில் தலைமலை சாஸ்தா கோவில் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என  ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். இதனால் ராமநதி அணை மூடப்பட்டது. தற்போது மழை குறைந்தது. இதனையடுத்து சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

சிவகாசியை அதிர வைத்த கொலை

image

சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துப்பாண்டி (38). இவர் இன்று இரவு சிவகாசி அண்ணா காலனி பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் ஏ.எஸ்.பி.க்கள் அசோக்குமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 12 டி.எஸ்.பி.க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News June 3, 2024

நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது: நமீதா

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா அவர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும்
2019 ல் நான் பாஜகவில் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன். தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது என்றார்.

News June 3, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 3)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 118 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார். ‌

error: Content is protected !!