Tamilnadu

News June 3, 2024

கோவில்களில் பணிபுரிய ஆணையர் அழைப்பு

image

திருச்சி கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் முன்னாள் படைவீரர்கள் அல்லது ஓய்வு பெற்ற காவல் ஆளுநர்களாக இருக்க வேண்டும், வயது 62க்கு மிகவும் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க திருச்சி கமிஷனர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

விசிகவில் இணைந்த முன்னாள் என்எல்சி மேலாளர்

image

விழுப்புரத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பிஐ அவரது இல்லத்தில் சந்தித்து இன்று (ஜூன் 3) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் முதன்மைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து பணிநிறைவு செய்து ஏ.ஜி.பி.ஆசைத்தம்பி என்பவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

News June 3, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 3) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை உடனே தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 3, 2024

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்

image

ராயக்கோட்டை பேருந்து நிலையம் கட்டி சுமார் 30 வருடங்களாகிறது. அது பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் பேருந்து செல்லக்கூடிய தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து டயர்கள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு பயணிகளும் அச்சத்தோடு செல்கின்றனர். இதனை சீரமைக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 3, 2024

நாய் வளர்ப்பவர்களுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி?

image

சென்னையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசென்ஸ் வாங்குவது கிடையாது. சென்னையில் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாயை நாய் எனக் கூற விடாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா?” என கேள்வி எழுப்பினார்.

News June 3, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா உடன் இருந்தார்.

News June 3, 2024

வேலூரில் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி

image

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 3) வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் கிரீன் சர்க்கிள் அருகே அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து: வாலிபர் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில்-கோவை சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான NRC ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள பஞ்சு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், மில்லில் பணிபுரிந்த விருதுநகரை சேர்ந்த மனோஜ் (20) என்ற வாலிபர் தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 3, 2024

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீஸ் குவிப்பு

image

நாங்குநேரி நம்பி நகர் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த 7 செங்கல் சூளைகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து இன்று (ஜூன் 3) அகற்றினர். இதன் மூலம் சுமார் 2.8 ஹெக்டேர் அரசு நிலம் மீட்கப்பட்டது. போலீஸ் டிஎஸ்பி பிரசன்ன குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News June 3, 2024

தென்காசியில் 1135 போலீசார் -எஸ்பி தகவல்

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி நாளை வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள், ஏழு டிஎஸ்பிக்கள், 33 ஆய்வாளர்கள் எஸ்ஐ ,எஸ்எஸ்ஐ உள்ளிட்ட போலீசார் 940 நபர்கள், சிஐஎஸ்எப் 63 நபர்கள், டிஎஸ்பி போலீசார் 90 நபர்கள், என 1135 பேர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!