Tamilnadu

News June 3, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகசிய தன்மையை பாதுகாப்பதை மீறுவதாக அமைகின்ற எந்த தகவலையும் யாரிடமும் தெரிவிக்க கூடாது. விதிமுறைகளை மீறுகின்ற நபருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆட்சி வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

காஞ்சி ஹாக்கி கிளப் அணிக்கு முதல் பரிசு

image

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் காஞ்சி ஹாக்கி கிளப் அணிக்கு முதல் பரிசும், சென்னை மவுன்ட் டாலர்ஸ் ஹாக்கி கிளப் அணிக்கு  இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.

News June 3, 2024

பெரம்பலூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

image

தண்ணீர் பந்தல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவர் நேற்று இரவு தண்ணீர் பந்தல் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

உறுதி செய்யப்பட்ட சிறுத்தையின் நடமாட்டம்

image

காடையாம்பட்டி தாலுகா காரவள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பசுமாட்டை மர்ம விலங்கு ஒன்று அடித்து கொன்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். வனத்திறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதில் நேற்று இரவு மீண்டும் ஒரு மாட்டை சிறுத்தை அடித்து கொன்று சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News June 3, 2024

சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தங்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம். பார்டைம் ஜாப் என்று சமூக வளைதளங்களில் வரும் லிங்க்குகள், தங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வரும் போலி லிங்க்கை தொட வேண்டாம். சமூக வளைதளங்களில் பணத்தை இழந்தால் உதவி எண் 1930 க்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in வெப்சைட்டில் புகாரளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News June 3, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 11ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 18 ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி கிராமசபை கட்டிடம் பட்டுக்கோட்டையிலும் நடைபெறுகிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News June 3, 2024

மனைவி கழுத்தறுத்து கொலை: கணவன் தற்கொலை

image

சாத்தான்குளம் அருகே உள்ள கழுங்குவிலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர், ஆசா தம்பதினர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் பிரபாகர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் இன்று அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரைஅரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 3, 2024

காஞ்சிபுரம்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான, பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் உள்ளார்.

News June 3, 2024

கோஷ்டிமோதல் 5 பேர் மீது வழக்குப் பதிவு

image

ஜோலார்பேட்டை அருகே அண்ணாண்டப்பட்டியை  சேர்ந்தவர் கலாராணி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகிய இருவருக்கும் இடையே மின்விரோதம் இருந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் செங்கல் மற்றும் கையால் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலீசார் கலாராணி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!