Tamilnadu

News August 20, 2025

பாலியல் சீண்டல் செய்த காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

image

ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் 2021ம் ஆண்டு ஏசுபாதம் எனும் காவலாளி வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ய முயன்றார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், காவலாளியை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று (ஆக-19) இந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News August 20, 2025

குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

image

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது உதவும்.

News August 20, 2025

திருப்பனந்தாள் காசி மடத்தின் மடாதிபதி காலமானார்

image

திருப்பனந்தாளில் காசி மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் 21-வது அதிபராக “கயிலை மாமுனிவர்”, ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார் சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) உள்ளார். இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீ காசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972-ல் ஸ்ரீ காசி மடத்தின் அதிபரானார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

News August 20, 2025

ஈரோடு: திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை

image

ஈரோடு: வெள்ளித்திருப்பூர் அருகே கொமராயனுார், மசக்கவுண்டனுாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விவேக்(29). விவசாயியான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பாப்பாத்தி காட்டுப்புதுாரில் உள்ள பாட்டி தோட்டத்துக்கு சென்றவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று(ஆக.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 20, 2025

இ- ஸ்கூட்டர் பெற மானியம்

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

புதுச்சேரியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி

image

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, 1 ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக.22-ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0413- 2331408/2220105 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 20, 2025

செங்கல்பட்டில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <>இந்த லிங்கில்<<>> சென்று உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <<17460609>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

ராம்நாடு: கோர்ட்டில் வேலை! உடனே APPLY

image

ராமநாதபுரம் மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <>உயர்நீதிமன்ற இணையதள<<>> பக்கத்திற்கு சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 20, 2025

தூத்துக்குடி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 20, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

image

சிவகங்கை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025 ஆகும், தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!