Tamilnadu

News June 2, 2024

தூத்துக்குடி:ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி

image

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் \அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று இன்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இன்று தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிகமான தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்

News June 2, 2024

உலக புகையிலை ஒழிப்பு தினம்

image

வலங்கைமான் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சுகாதார நிலைய மருத்து அலுவலர் அருணா தேவி தலைமை வைத்து புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் புகையிலைப் பொருட்களை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் சுகாதார மேற்பார்வையாளர் கோபு சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்

News June 2, 2024

திண்டுக்கல் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள செட்டிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் கழிவு பஞ்சுகளில் இருந்து நூல் தயாரிக்கும் பஞ்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் ஏராளமான பண மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

News June 2, 2024

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற போட்டி

image

திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்விக்குழுமத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று தி.மலை, எஸ்.கே.பி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

News June 2, 2024

அரியலூரில் மாநில பிரச்சார இயக்கம் துவக்கம்

image

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அரசு போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ போக்குவரத்து துறையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஜூன்-1 ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு மாநில பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இதில் கிருஷ்ணன் சி.ஐ.டி.யூ தலைமை தாங்கினார். துரைசாமி சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News June 2, 2024

திருச்சி:இலவச மருத்துவ முகாம் 

image

திருச்சி தில்லை நகர் பகுதியில் கார்த்திக்  வைத்தியசாலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு முகாமை தொடங்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News June 2, 2024

ஜுன் 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி ஜுன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் நாளன்று வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜுன் 1) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

பொதுமக்களுக்கு தொடர் எச்சரிக்கை

image

கூடலூர் வன கோட்டத்தில் மனித விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள இடங்களில் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக பிதர்காடு பகுதியில் யானை முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டு எச்சரித்து வருகின்றனர்.

News June 2, 2024

ராம்நாடு – மானாமதுரை இடையே ரயில் சேவை ரத்து

image

திருச்சி – ராமநாதபுரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849/16850) ராமநாதபுரம் – மானாமதுரை – ராமநாதபுரம் இடையே ஜூன் 30 ஆம் தேதி வரை வெள்ளி, ஞாயிறுக்கிழமை தவிர இதர 5 நாட்களில் தண்டவாளப் பணி பராமரிப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவனத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 2, 2024

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

image

மாதனூர் அடுத்த தர்மகொண்ட ராஜா திருமலை திருக்கோயில்
வெங்கிலி மலைக்கு பின்புறம் உள்ள காடுகளில் மலையின் மீது அமைந்துள்ளது. அழகிய குளமும் அமைதியான சூழலும் இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.‌ நேற்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!