India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் இளைஞர்கள் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்குவது, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நிகழ்வு தொடர்கிறது. ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் செய்யும் இச்செயலை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறை பறக்கும் பாலத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
வருஷநாடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பாண்டியம்மாளுக்கும், சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்துள்ளார்.இதனை சின்னக்காளை கண்டிக்கவே ஆத்திரத்தில் அவரை மணிகண்டன் கத்தியால் குத்தினார்.போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டையில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில இளைஞர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுராம் (25) என்பது தெரிந்தது.
புதுவை காமராஜ் நகர் டாக்டர் அழகம்மை, இவரது செல்போனில் மும்பையில் இருந்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரது பெயரில் தைவான் நாட்டில் இருந்து 20 கிலோ போதை பொருட்கள் வந்ததாக கூறி அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. நேற்று அவர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரியாக வாய்க்கால்களை தூர்வாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தூர்வாரியத்தை கண்டித்து விவசாயிகள் வருகிற 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூர் வராவிட்டால் சாலை மறியலில் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர் .
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள எரவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஜூன்.1 (10 am – 3pm, 7 மணி முதல் ) 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது . மழை விட்டு 2 மணி நேரமாகியும் மின் இனைப்பு வராததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அதம்பார் துனை மின்நிலையத்தில் தொடர்பு கொண்டும் பயனில்லை என மக்கள் தெரிவித்தனர்.
வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (18) கல்லூரி மாணவர். விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர் சந்தோஷ் உடன் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். புதுக்காடு எஸ்டேட் வழியாக பைக்கில் வந்தபோது வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள் இவர்களை தாக்கியது. இதில் யானை தாக்கியதில் முகேஷ் உயிரிழந்தார். வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக
பொது நுாலக இயக்குநர் இளம்பகவத் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்
இளைஞர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் புத்தகங்களை படிக்கும் இடமாக மட்டுமின்றி திறன்களை வளர்க்கும் இடமாகவும் மாறி வருகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.