Tamilnadu

News June 1, 2024

மரக்காணம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை பகுதியில் இன்று புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும், கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த கார் ஓட்டுநர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 1, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 13ல் புதுச்சேரி- மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 3 ரயில்களும் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

சாலை விதிகளை பின்பற்ற மாவட்ட காவல் எச்சரிக்கை

image

இன்று (01.06.2024) முதல் அமலுக்கு வந்த போக்குவரத்து புதிய விதிமுறையின் படி  18 வயதுக்குட்பட்ட சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ரூ.25000 அபராதமும் 3 மாதங்கள் சிறையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டும் சிறுவருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவே சாலை விதிகளை பின்பற்ற ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News June 1, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

நெல்லை, முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்(65), மந்திரம்(62) ஆகிய இருவரும் தண்ணீர் டிராக்டரில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு தோழப்பன் பண்ணை தோட்டத்தில் தண்ணீர் ஊற்றச் சென்றுள்ளனர். அப்போது வயல் வெளியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மந்திரம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News June 1, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் விலக்கு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் பயனடையும் வகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும்,  விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (தரைத்தளம்), காஞ்சிபுரம், தொலைபேசி எண் : 044 -29998040- ஐ தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 1, 2024

டாஸ்மாக் கடை மூட உத்தரவு

image

சேலம் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் என அனைத்தும் மூட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

விருதுநகர் இனிப்பான கருப்பட்டி மிட்டாய் சிறப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தின் மிகவும் பிரபலமான தின்பண்டமாக இருப்பது கருப்பட்டி மிட்டாய் ஆகும். தேன்குழல் மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், ஏணி மிட்டாய் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மிட்டாய், பார்க்க ஜிலேபி போல் இருந்தாலும், கருப்பட்டியில் செய்வதால் இதன் சுவை தனித்துவமானதாக உள்ளது. இந்த மிட்டாய் தென்மாவட்டங்களிலும் கிடைக்கின்றன. விருதுநகரின் தனித்துவ சுவையாகவும் உள்ளது இந்த கருப்பட்டி மிட்டாய்.

News June 1, 2024

கள்ளக்குறிச்சி: நாளை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News June 1, 2024

சிறுவன் மீது பாய்ந்த போக்சோ

image

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அச்சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

தி.மலை: நாளை மழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!