India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர் மேம்பாட்டு மையம் சார்பில் பேராசிரியர்களின் பணி மற்றும் விளைவுகள் சார்ந்த கல்வி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் கிருபானந்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை இயக்குநர் செந்தில்குமார், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பவானி அரசு மருத்துவமனையில்,
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான நாளை (ஜூன்.3) பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கருணா என பெயர் சூட்டி தங்க மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசு பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அடுத்த பட்டதாரி பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற ஊராட்சி தலைவர் லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். வட்டாட்சியர் மஞ்சுளா ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பிரேம் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் 02.06.2024 இன்று காலை 10 மணியளவில் மக்கள் சட்ட உரிமைகள் கழக கலந்தாய்வுக் கூட்டம் பொதுச் செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழக துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று நடத்தினார். தேர்தலில் உரிமையாளர்கள் சங்க தலைவராக செந்தில்குமார், பொருளாளராக குமாரகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூரில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் என்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் மலைக்கோயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவின் படி வாகனங்கள் அடிவாரப் பகுதியில் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று வாகனத்தில் வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் பக்தர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள எரவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஜூன்.1 (10 am – 3pm, 7 மணி முதல் ) 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது . மழை விட்டு 2 மணி நேரமாகியும் மின் இனைப்பு வராததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அதம்பார் துனை மின்நிலையத்தில் தொடர்பு கொண்டும் பயனில்லை என மக்கள் தெரிவித்தனர்.
கோவை மருதமலை ஐஓபி காலனியை சோ்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை இணை ஆணையர் சிவகுமாா் (61). இதேபோல் வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சகஸ்ராம சுப்பிரமணி (73). இவர்களிடம் சில தினங்களுக்கு முன் போனில் பேசிய மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ.1.27 கோடி வங்கி கணக்கில் பெற்று பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்ன சேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தில் இன்று விடியற்காலையில் 15 பேர் ஏறக்கூடிய மினி பஸ்ஸில் சுற்றுலா செல்வதற்காக அப்பகுதியில் உள்ளவர்கள் கிளம்பி உள்ளனர் கிளம்பிய 500 மீட்டர் தூரத்தில் மினி பஸ் கவிழ்ந்தது இதில் அடிபட்டவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் மணிமாறன்(35) என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்
Sorry, no posts matched your criteria.