India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள ரத்னாபுரி பகுதியை சேர்ந்த மகாராஜன் (38) என்பவர் கடந்த 30ம் தேதி ஆறுமுகநேரி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் அரசு சார்பில் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான தி.மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தி.மலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மதுரையின் மற்றொரு பெருமையாக மதுரை கலைஞர் நூலகம் திகழ்கிறது. திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஆசியாவிலேயே பிரமாண்டமான இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இங்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆலங்குடி பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் நீடித்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனை அருகே தினம் வாகன ஓட்டிகள் குழந்தைகள் பெரியவர்கள் வரை மற்றும் ஆடு மாடுகள் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இன்று ஆட்டு குட்டியை நாய்கள் கூட்டமாக வந்து கடித்து குதறியது இதனை மக்கள் அச்சத்துடன் பார்த்து நிர்வாகத்திடம் புகார் செய்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பொழிந்த மழையளவு அதிகபட்சமாக ஆலங்காயம் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக திருப்பத்தூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்காயம் -22 மி.மீ, வடபுதுப்பட்டு – 22 மி.மீ, ஆம்பூர் -16 மி.மீ, நாட்றம்பள்ளி – 14.40 மி.மீ, வாணியம்பாடி – 6 மி.மீ
திருப்பத்தூர் – 3 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஓசூரில் பகுதியில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 381 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நாகேஸ்வரன் வரவேற்றார். இதில், இன்போசிஸ் நிறுவன துணைத்தலைவர் விக்டர் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
காங்கேயம் அருகே பாப்பினி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு கணையம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே வாலிபர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முகமது ஷாகுல் அமீது என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மறவை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 17-ஆவது ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி மறவன்குடியிருப்பு சர்ச் விளையாட்டு மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி
மாமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி பொருளாதார பிரிவு மாவட்ட தலைவரும் ஆகிய ஐயப்பன் நேரில் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் தன்னார்வலர் அமைப்பானது, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு, SRPO நிறுவனர் /தலைவர் P.வடிவேல் அவர்கள் மரக்கன்றுகள் வழங்கினார். நாமக்கல் மண்டல செயலாளர் S. நடராஜ், மண்டல பொறுப்பாளர் V. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.