Tamilnadu

News June 3, 2024

அய்யா வைகுண்டர் கோவில் தேர்திருவிழா

image

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழா இரவு கலிவேட்டை நடைபெற்றது.  11ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

image

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போலீசார் பாது காப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் நாளை மூடப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

மாநகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் 

image

ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரம், ஜெனரேட்டா்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் லிட்டா் டீசல், ஒரு லட்சம் லிட்டா் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பெட்ரோல் பங்க் அமைத்தால் ஆண்டுக்கு ரூ.1 கோடி மிச்சமாகும். எனவே ஈரோடு மாநகராட்சி சாா்பில் சம்பத் நகா் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 3, 2024

கலைஞரின் பிறந்தநாளை விழா கொண்டாட்டம்

image

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர்.

News June 3, 2024

கலைஞர் பிறந்த நாளில் அன்னதான விழா

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

மழை நீரை சேகரிக்க கலெக்டர் அறிவுறத்தல்!

image

கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரிவர இல்லாமல் இருப்பதால் காலநிலை மாற்றத்தினால் மழை காலங்களில் மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது. மழை நீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்றார்.

News June 3, 2024

வத்திராயிருப்பு:வனத்துறை அறிவுறுத்தல்

image

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் நேற்று மாலை முதல் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால்,பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,அனுமதிக்கப்பட்ட நாட்களில் தினசரி மழைப்பொழிவு மற்றும் ஆறுகளில் நீர்வரத்தை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

News June 3, 2024

முதியவரை மிரட்டிய வாலிபர் கைது

image

தூத்துக்குடி சவேரியார் புரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று சோரீஸ்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அண்ணா நகரை சேர்ந்த பொன்ராஜ் (24) என்ற வாலிபர் அவரை வழிமறித்து பணம் கேட்டு அறிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் பொன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

ஈரோடு : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

image

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் (70.59%) வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் எண்ணும் பணி சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 3, 2024

மின் உற்பத்தி தொடக்கம்

image

லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (ஜூன்.2) முதல் 30 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

error: Content is protected !!