Tamilnadu

News June 3, 2024

காஞ்சிபுரம்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான, பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் உள்ளார்.

News June 3, 2024

கோஷ்டிமோதல் 5 பேர் மீது வழக்குப் பதிவு

image

ஜோலார்பேட்டை அருகே அண்ணாண்டப்பட்டியை  சேர்ந்தவர் கலாராணி. இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகிய இருவருக்கும் இடையே மின்விரோதம் இருந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் செங்கல் மற்றும் கையால் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலீசார் கலாராணி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கையில் எத்தனை சுற்றுகள் ?

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதில், மன்னார்குடி 20 சுற்றுகளாகவும் , திருவையாறு 22 சுற்றுகளாகவும் , தஞ்சாவூர் 21 சுற்றுகளாகவும் , ஒரத்தநாடு 21 சுற்றுகளாகவும் , பட்டுக்கோட்டை 20 சுற்றுகளாகவும் , பேராவூரணி 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 3, 2024

வெள்ளகோவிலில் உணவு வழங்கிய திமுகவினர்

image

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று வெள்ளகோவில் சொரியங்கினத்துப்பாளையம் பகுதியில் உள்ள சர்வாலயம் முதியோர் இல்லத்தில் ஒருங்கிணைந்த வெள்ளகோவில் திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி. முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

தேன்கனிக்கோட்டை அருகே கலைஞர் பிறந்த நாள் விழா

image

தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் தஸ்தகீர் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை முன்னிட்டு திமுக கொடியை ஏற்றி வைத்து, கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

சாதித்த மாணவர்களை பாராட்டிய அமைச்சர்

image

மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கங்களையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். சாதித்த மாணவ, மாணவியரை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார்.

News June 3, 2024

கருத்து கணிப்பில் உண்மையில்லை-அமைச்சர்

image

மதுரையில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை எனவும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளதால் முடிவுகளை நாளை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

News June 3, 2024

ராமேஸ்வரம் கோயில் மேலாளர் மீது புகார்

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இலவச தரிசன அனுமதி சீட்டுகளை உள்ளூர் பக்தர்களுக்கு கொடுக்க மறுத்து வரும் கோயில் நிர்வாக மேலாளர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்திய கம்யூ. சார்பில் இன்று மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் 14.6.24 அன்று தேவஸ்தான அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
இந்திய கம்யூ
நகர் செயலர் செந்தில்வேல்
கூறினார்.

News June 3, 2024

பெருமூச்சி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

image

அரக்கோணம் அடுத்த பெரு மூச்சியில் இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள மீன்கள் இன்று செத்து மிதந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ரவிக்கு தகவல் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து எம்எல்ஏ ரவி இன்று ஏரியை நேரில் பார்வையிட்டு மீன்கள் எதனால் செத்து இருந்தன என்று பொதுப்பணித்துறையினரிடம் கேட்டு அறிந்தார். மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பழனி ,அதிமுக பிரமுகர் நரேஷ் உடன் இருந்தனர்.

News June 3, 2024

தஞ்சை: அலுவலர்கள் குறித்த முழு விவரம்

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குக்கு 8 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 306 அலுவலர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

error: Content is protected !!