Tamilnadu

News June 3, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் ஏ.எஸ்.பி.க்கள் அசோக்குமார், அர்னால்டு ஈஸ்டர், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 12 டி.எஸ்.பி.க்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் மற்றும், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News June 3, 2024

நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது: நமீதா

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா அவர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும்
2019 ல் நான் பாஜகவில் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன். தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது என்றார்.

News June 3, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 3)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 118 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார். ‌

News June 3, 2024

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நேரடி ஒளிபரப்புக்கு தடை

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, பாளை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அல்லது பதிவான ஓட்டுகள் விபரத்தை பதிவு செய்ய கூடாது. ஊடகவியலாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் குறிப்பிட்ட 5 எண்ணிக்கை சண்ட குழுவாக குறுகிய காலத்திற்கு மட்டும் அழைத்து செயல்படுவர். ஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றார்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் நெல்லை தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட்களுக்கான கிட்டங்கியில் பாதுகாப்பாக முத்திரையிடப்படும். ஆலங்குளம் தொகுதி இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்படும் என்றார்.

News June 3, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 3) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் ஜெரினா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

திருப்பூரில் பாஜக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் பல்லடம் சாலை எல் ஆர் ஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. இதில் நாளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News June 3, 2024

செல்போன், ஸ்மார்ட் வாட்ச் கூடாது: முகவர்களுக்கு தடை

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 3) கூறியதாவது, நாளை ஓட்டு எண்ணும் மையத்தில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர்களின் முகவர்கள் பால்பாயிண்ட், பேனா, பென்சில், பேப்பர், சிறிய நோட்பேட், ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வழங்கப்பட்ட 17சி படிவம் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.

News June 3, 2024

நாளை மாவட்டம் முழுவதும் விடுமுறை

image

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதனால், மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் தமிழக அரசு உத்தரவின்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

திருவள்ளூர் அருகே நடிகை ரோஜா

image

ஜூன் 3 திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா சிறப்பு வழியில் ஆபத் சகாய விநாயகர், சண்முகர் ,மூலவர் ,வள்ளி தெய்வயானை மற்றும் உற்சவர் ஆகிய சன்னதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தலில் வெற்றி பெறவும் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார். தொடர்ந்து ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் மலர்கள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!