Tamilnadu

News August 19, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News August 19, 2025

அயோத்தியாப்பட்டணம் நூல் மில்லில் திடீர் தீ விபத்து

image

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள நூல் தொழிற்சாலையில் இன்று (ஆக.19) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நூல் மூட்டைகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 19, 2025

ராம்நாடு: உங்கள் Phone மிஸ் ஆகிட்டா..?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 19, 2025

புதுச்சேரி: துயரம் நீக்கும் அதிசய கோயில்!

image

காரைக்காலில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49ஆவது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும் சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். இதனை ஷேர் பண்ணுங்க.!

News August 19, 2025

மறுப்பு வெளியிட்ட நெல்லை மாநகர காவல்துறை

image

நெல்லையில் வரும் 22ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் மாநாட்டிற்கு நெல்லை மாநகர காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நெல்லை மாநகர காவல்துறை இன்று (ஆக.19) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் பேனர் வைப்பதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளனர்.

News August 19, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும். பகிரவும்!

News August 19, 2025

தென்காசி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு குரு பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மேலும் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055800, 9488845666 எண்ணிற்கும், தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.

error: Content is protected !!