Tamilnadu

News June 4, 2024

தென்காசியில் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை

image

தென்காசியில் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையானது தனியார் கல்லூரியில் தீவிரமாக எழுதப்பட்டு வருகிறது .இதில் மூன்றாவது சுற்றில் திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் 54,004வாக்குகள், அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணசாமி 30,276 வாக்குகள் ,பாஜக 25571 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 17,736 வாக்குகள் பெற்றுள்ளன. இதில் 23 ஆயிரத்து 724 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 3ஆவது சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக- 26,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக-15,958, மூன்றாவது இடத்தில் பாமக-18,279 வாக்குகள், நாம் தமிழர் கட்சி-.5,187 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் திமுக வேட்பாளர் தொடர்ந்து 28,410 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திருநெல்வேலியில் தொடர்ந்து அதிமுக கவலைக்கிடம்

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று (ஜூன் 4) அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை வெளியான முடிவில் இந்திய கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கட்சியான அதிமுக கட்சி 8137 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

News June 4, 2024

மதுரை தொகுதி மூன்றாவது சுற்று நிலவரம்

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22446 வாக்குகள், அதிமுக 11062 வாக்குகள், பாரதிய ஜனதா 10182 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4726 வாக்குகள் பெற்றுள்ளது.

News June 4, 2024

திருவாரூர்: மூன்றாவது சுற்று நிலவரம்

image

திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டின தொகுதியில் தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக + இ.கம்யூ கூட்டணி 50, 539 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 27, 735, நாம் தமிழர் 13, 834, பாஜக 9, 533 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

ஆறாவது சுற்றில் திடீர் திருப்பம்

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 6ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் -1,51,953, அதிமுக குமரகுரு – 1,34,644, பாமக தேவதாஸ் – 19,531, நாதக ஜெகதீசன் – 19,035. இதில் திமுக வேட்பாளர் – 17,309 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

முன்னாள் முதல்வர் தொடர்ந்து பின்னடைவு

image

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். 11 மணி நிலவரப்படி ஓபிஎஸ் 17295 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை விட 14658 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

News June 4, 2024

வேலூர்: 5 ஆம் சுற்றில் தி.மு.க முன்னிலை

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதி 2024 வாக்குப்பதிவு 5 ஆம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 120357 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் 84691 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 29495 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 984 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

நாகப்பட்டினம் 3 ஆவது சுற்று நிலவரம்

image

நாகப்பட்டினத்தில் தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக + இ.கம்யூ கூட்டணி 50, 539 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 27, 735, நாம் தமிழர் 13, 834, பாஜக 9, 533 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

சிதம்பரம்: 4ஆம் சுற்று முடிவு

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 43,484 வாக்குகளுடன் 10,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 33,078 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 13,255 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,371 வாக்குகள் பெற்றுள்ளார்.

error: Content is protected !!