India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாக், டயாலிசிஸ், ஆக்சிடெனட் கேர் ஆகிய 3 படிப்புகளுக்கு
சுகாதாரத்துறை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அரசு ஒதுக்கீடு 24, சுயநிதி ஒதுக்கீடு 6 என மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சேர சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த ராஜ மனோகரனுக்கு பதிலாக தூத்துக்குடியில் பணிபுரிந்த முன்னாள் தனித்துணை ஆட்சியர் ஹபிபுர் ரஹ்மான் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக.19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலாவாக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவில், மாணவர்கள் ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேரடியாகக் கண்டறிந்து உற்சாகத்துடன் கற்றுக்கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.19) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், ரசாயன சாயங்கள், பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை அரசால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.