India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி சங்கமங்களின் பூமி.நம்
நாட்டின் புனிதநதிகள்
வெவ்வேறு கடல்களில்
பாய்கின்றன.இங்கே அந்த கடல்கள் சங்கமிக்கின்றன.பாரதத்தின் கருத்தியல் சங்கமமாக கன்னியாகுமரி விளங்குகிறது.இங்கே விவேகானந்
தர் நினைவகம், வள்ளுவரின் சிலை,காந்திமண்டபம்,காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.இந்த சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையின்
சங்கமமாக இங்கு ஒன்றுபடுகின்றன.
கடலூரில் லோக்சபா தேர்தல் (ஏப்.19) முடிந்து வாக்குப்பெட்டிகள் கடலூர், தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கப்படும். தொடர்ந்து கடலூர் மற்றும் நெய்வேலி தலா 17, விருத்தாசலம் 21, பண்ருட்டி 19, திட்டக்குடி 18 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் டி.ஆர்.பாலு முறையிட்டுள்ளார். சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக, வாக்கு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மேற்பார்வையில் சீல் அகற்றப்பட்டது.மேலும் கடலூர் நாடாளுமன்ற வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் காலையிலிருந்து கூட்டமாக செல்கின்றனர்
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்றார். அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு அறைகளில் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறைகளை ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திர அறைகளை தற்போது திறக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தொகுதியில் மொத்தம் 78.16% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் கவிமணியும், பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் 67.55% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமாரும், அதிமுக சார்பில் கிருஷ்ணசாமியும், பாஜக சார்பில் ஜான் பாண்டியனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் செய்தியாளர்கள் நிறுத்தப்பட்டதால், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்றபோது நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வரிசையாக அமைக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடபெறவுள்ள நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.