Tamilnadu

News June 4, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,இன்று (04.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் இங்கு சுமுகமாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

News June 4, 2024

கள்ளக்குறிச்சி: முதல் சுற்றில் திமுக முன்னிலை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 22,712, அதிமுக குமரகுரு – 22,324, பாமக தேவதாஸ் – 2587, நாமக ஜெகதீசன் – 2379, இதில் திமுக வேட்பாளர் – 388 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

மத்திய சென்னை: 4,000 வாக்குகள் முன்னிலையில் தயாநிதி மாறன்

image

மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை விட 4,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 51% வாக்குகளை இவரே பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

மயிலாடுதுறை காங்கிரஸ் முன்னிலை

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் – 25005 , அதிமுக – 12318 , பாமக – 10031 ,நாதக – 5312 மேலும்
12,687 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது‌‌.

News June 4, 2024

திருச்சியில் மதிமுக முன்னிலை

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
இதில் மதிமுக-16, 411 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் அதிமுக-8159, மூன்றாவது இடத்தில் அமமுக-2940, நான்காவது இடத்தில் நாதக-3713 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஈரோட்டில் திமுக தொடர்ந்து முன்னிலை!

image

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக 14,611 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 12786 ஓட்டுகளும், தமாகா 2400 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 1589 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

ஈரோடு: திமுக முன்னிலை

image

ஈரோடு மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 4,492 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் சிவகுமார் 2,962 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கார்மேகம் 327 வாக்குகளும், தமாகா வேட்பாளர் விஜயகுமார் 447 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

விருதுநகர் தேமுதிக முன்னிலை

image

விருதுநகர் மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 9,022 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 4,379 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

5,407 வாக்குகள் பெற்று சௌமியா அன்புமணி முன்னிலை

image

தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 2,180 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1917 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

கோவையில் அண்ணாமலை முன்னிலை

image

கோவை தொகுதி பொருத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியின் நிலவி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை முன்னிலையில் உள்ளார் நகரப் பகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!