India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி 81815, அ.தி.மு.க கூட்டணி 18978, பா.ஜ.க கூட்டணி 57411வாக்குகள் பெற்றுள்ளன. 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24404 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து மூன்று சுற்றுகள் திமுக முன்னிலையில் உள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் முன்னணி நிலவரத்தை திமுக தலைமையிலான இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்பி, ஊடக மையத்தில் செய்தியாளர் அறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலை முடிவுகளை பார்த்து மகிழ்ந்தார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் – 1,06,263 வாக்குகளும்,
தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து – 67,819 வாக்குகளும்,பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சான் – 31,511 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன் 13,582 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மக்களை நம்பி ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்” என்றார். முதலில் இவர் பாஜக தான் வெற்றி பெறும் என பேசியிருந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அந்தர் பல்டி அடித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியின் இரண்டாம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் சுற்றில் திமுக வேட்பாளர் அருண் நேரு 29340 வாக்குகள் பெற்றுள்ளார்.அவர் சுமார் 19,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் நான்காம் சுற்று எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 4086 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பாபு 3044 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஸ்டாலின் 1306 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 1095 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியின் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 31,937 வாக்குகள் பெற்று 7,520 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 21,519 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 9,136 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 2,404 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 71,284 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 22,934 வாக்குகள், பிஜேபி 23,079 வாக்குகள், நாம் தமிழர் 10,793 வாக்குகளும் பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் 5ம் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 1,09,823, அதிமுக குமரகுரு – 1,28,266, பாமக தேவதாஸ் – 15,953, நாதக ஜெகதீசன் – 15,724 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் – 18,443 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதல் சுற்று முடிவடைந்து 1,22,713 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 59,759 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார், பாஜக கட்சி வேட்பாளர் நமச்சிவாயம் 49,909 வாக்குகளில் சேகரித்து உள்ளார், அதிமுக கட்சி வேட்பாளர் தமிழ் வேந்தன் 3247 வாக்குகள் சேகரித்து உள்ளார்.
Sorry, no posts matched your criteria.